Cinemaபிரபல நடிகர் சரத் பாபு கவலைக்கிடம்

பிரபல நடிகர் சரத் பாபு கவலைக்கிடம்

-

பிரபல நடிகர் சரத்பாபு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (வயது 71). உடல்நலம் குன்றிய சரத்பாபு, பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமான நிலையில் கடந்த 20ஆம் திகதி முதல் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு “வென்டிலேட்டர்” மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், இன்னும் கூடுதல் நேரம் கடந்த பின்புதான் முழுமையான தகவலை அளிக்க முடியும் என்றனர்.

தெலுங்கில் அறிமுகம்

சத்யம்பாபு தீட்சிதலு என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் சரத்பாபு, 1973ஆம் ஆண்டு ‘ராமராஜ்யம்’ என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1977ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய “பட்டினப்பிரவேசம்” படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரவேசித்தார்.

சுமார் 50 ஆண்டு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் 200இற்கு மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட பாத்திரங்களில் தோன்றியுள்ளார்.

சரத்பாபு தமிழில் ரஜினிகாந்துடன் நடித்த முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, கமல்ஹாசனுடன் நடித்த சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

தெலுங்கில் நடித்த முடு முல்ல பந்தம், சீதாகோக சிலுகா, சம்சாரம் ஒக சதரங்கம், அன்னய்யா, ஆபத்பாந்தவடு போன்ற படங்கள் சரத்பாபுவுக்கு பெயர் பெற்று கொடுத்தன.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியர்களுக்கு பிரதமர் ஜெசிந்தா ஆலன் விடுத்துள்ள வேண்டுகோள்

அவுஸ்திரேலியா தினத்தன்று மெல்பேர்ணில் நடைபெறும் பல்வேறு கொண்டாட்டங்களை மதிக்குமாறு விக்டோரியர்களுக்கு பிரதமர் ஜெசிந்தா ஆலன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில் நகரம் முழுவதும் பெரும் கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது...

180 ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் இன்று திருமணம் செய்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். மத்திய பாங்காக்கில் உள்ள சொகுசு ஷாப்பிங் மாலில் இன்று...

மனநலத் துறையில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என கோரிக்கைகள்

ஆஸ்திரேலியாவின் மத்திய அரசு மனநலத் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Orygen's Executive Director Pat McGorry, ஆஸ்திரேலியர்கள் மனநலம்...

விக்டோரியர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட 177 ஆண்டுகால வரலாற்று இடம்

விக்டோரியா கலங்கரை விளக்கம் தற்போது சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மீண்டும், விக்டோரியர்கள் Cape Otway-இல் உள்ள இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏற வாய்ப்பு கிடைக்கும்...

மெல்பேர்ண் வீடொன்றிலன் படுக்கையறையில் ஏற்பட்ட தீ விபத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் நேற்று காலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ வீட்டின் படுக்கையறையில்பரவியதாகவும், தீ விபத்தின் போது வீட்டில்...

விக்டோரியர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட 177 ஆண்டுகால வரலாற்று இடம்

விக்டோரியா கலங்கரை விளக்கம் தற்போது சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மீண்டும், விக்டோரியர்கள் Cape Otway-இல் உள்ள இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏற வாய்ப்பு கிடைக்கும்...