நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் முழுவதும் 04 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 600க்கும் அதிகமானோர் (644) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 314 பேர் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை இந்தக் குழு கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழுவுக்கு எதிராக 1108 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது 68 சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.