நாஜி ஸ்வஸ்திகா மற்றும் நாஜி சல்யூட் உள்ளிட்ட இனவெறி சின்னங்களை காட்சிப்படுத்துவதில் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.
இந்தப் பிரேரணை ஏற்கனவே நாடாளுமன்றக் குழுவின் முன் விவாதத்தில் உள்ளது.
அதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு அதிகபட்சமாக 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இருப்பினும், பௌத்த-இந்து அல்லது ஜைன மதங்களில் பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திகா லோகோவைக் காண்பிக்க எந்தத் தடையும் இல்லை.
ஒவ்வொரு மாநில அளவிலும் ஸ்வஸ்திகா காட்சிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன, ஆனால் மீறல் வழக்குகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.