ஸ்கொட்லாந்தில் நிறைமாத கர்ப்பிணியான ஆசிரியர் ஒருவர் தமது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவருடன் தங்கியிருந்த வருங்கால கணவன் மாயமாகியுள்ளார்.
ஸ்கொட்லாந்து பொலிஸார் குறித்த நபரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
35 வயதான Marelle Sturrock கிளாஸ்கோவில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், தீவிர விசாரணையை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.