Newsபி.பி.சி நிறுவன தலைவர் இராஜினாமா

பி.பி.சி நிறுவன தலைவர் இராஜினாமா

-

முன்னாள் பிரதமருக்காக பெரும் தொகை நன்கொடை அளித்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் இராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, பி.பி.சி., நிறுவனம். இதன், ‘டிவி சேனல்’ மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிறுவனத்தின் தலைவராக பிரிட்டனின் ரிச்சர்ட் ஷாரப் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப், கன்சர்வேடிவ் கட்சியின் மிகப் பெரும் நன்கொடையாளராக இருந்து வருகிறார்.

கடந்த, 2021 ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சனுக்கு பெரிய அளவில் (ஒரு பில்லியன் டொலர் ) நன்கொடை அளித்துள்ளார்.

அதற்கு பரிசாக தான் அரசாங்கத்தின் பரிந்துரையின்படி, அவர் பி.பி.சி., தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

எனவே ரிச்சர்ட் ஷார்ப் நியமனம் பி.பி.சி.யின் நடுநிலைதன்மை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இதையடுத்து, ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...