2022-2024 நிதியாண்டுகளுக்கு இடையில் 07 இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் அவுஸ்திரேலியாவிற்கு வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்ற விதிமுறைகளும், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும், வேலை விடுமுறை விசா வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து எல்லைகள் மூடப்பட்டதன் காரணமாக, 2020-2021 காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 85,000 ஆகக் குறைந்துள்ளது.
2022-23ல் 04 லட்சமாகவும், 2023-24ல் 315,000 ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கோவிட்-க்கு முந்தைய குடியேற்ற நிலைக்குத் திரும்ப ஆஸ்திரேலியா 2029 அல்லது 2030 வரை காத்திருக்க வேண்டும் என்று சமீபத்திய அறிக்கை கணித்துள்ளது.
இதற்கிடையில், பெருகிவரும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தொழிற்கட்சி அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என லிபரல் எதிர்க்கட்சி கூட்டணி குற்றம் சாட்டுகிறது.
 
		




