News33 வருடங்களை கொண்டாடும் வகையில் நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்

33 வருடங்களை கொண்டாடும் வகையில் நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்

-

ஹப்பிள் தொலைநோக்கி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டு 33 வருடங்கள் கொண்டாடும் வகையில் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1990-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி இதுவாகும். ஹப்பிள் தொலைநோக்கி ஒரு பேருந்து அளவுள்ளது.

97 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை ஹப்பிள் சுற்றி வருகின்றது. அகச்சிவப்பு கதிர், புற ஊதா கதிர், காணுறு ஒளி ஆகிய மூன்று அலைநீளங்களில் நிறமாலைமானி மற்றும் காட்சி செய்யும் திறன் கொண்டது.

0.05 வினாடி டிகிரி விலகியுள்ள பொருட்களைக்கூட பிரித்து இனம் காணும் காட்சித் திறன் கொண்டது.

இந்த ஹப்பிள் தொலை நோக்கியை பூமியின் சுற்றுவட்ட பாதையில் செலுத்தி 33 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஹப்பிள் எடுத்த புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

ஹப்பிள் இம்முறை ‘NGC 1333’ என்ற விண்வெளி பகுதியை படம்பிடித்து அனுப்பியுள்ளது. ‘NGC 1333’ என்பது நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியாகும்.

இவை பெகாசஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு பிரதிபலிப்பு நெபுலா ஆகும். இது பூமியிலிருந்து சுமார் 960 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இனி அமெரிக்காவிற்கு எளிதாக பயணிக்கலாம்

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இப்போது அடிலெய்டில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம். அமெரிக்க விமான நிறுவனமான United Airlines, வாரத்திற்கு மூன்று விமானங்களை திங்கள், புதன்...

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

ஜூலை 1 முதல் ஆஸ்திரேலிய Skilled விசாவில் ஏற்படும் மாற்றம்

ஜூலை 1 ஆம் திகதி முதல் திறன் விசா வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச வருமான தள்ளுபடியை 4.6 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வருடாந்திர வாராந்திர ஊதிய...

ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா மீது புதிய வரிகளை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, இந்த முடிவு ஆஸ்திரேலிய...