News550 குழந்தைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

550 குழந்தைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

-

நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்புச் சட்ட விதிமுறைகளின்படி, விந்தணுவை தானம் செய்யும் ஒரே நபர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மேலும், செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவரே தந்தையாக இருக்கவும் அனுமதி கிடையாது. ஆனால் இந்த சட்ட விதிமுறைகளை மீறிய ஒருவர் உள்நாடு, வெளிநாடு என விந்தணு தானம் மூலம் 550க்கும் குழந்தைகளுக்கு தந்தையாகியிருக்கிறார்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர்(41). குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு உதவிடும் நோக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து தனது விந்தணுக்களை தானம் செய்வதை சேவையாக கருதி தொடங்கினார். இம்முயற்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததால் பின்னர், நாளடைவில் இதையேத் தொழிலாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்புச் சட்ட விதிமுறைகளின்படி, விந்தணுவை தானம் செய்யும் ஒரே நபர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மேலும், செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவரே தந்தையாக இருக்கவும் அனுமதி கிடையாது.

நெதர்லாந்தில் உள்ள 11 செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மற்றும் பிறநாடுகளில் உள்ள இரு மையங்கள் என மொத்தம் 13 மையங்களின் மூலமாக விந்தணு தானத்தை தொடர்ந்து செய்துவந்த மெய்ஜர், இதற்கு முந்தைய தனது தானங்களின் விவரங்களை பிறருக்கு வெளிப்படுத்தாமல் இதுவரையில் சுமார் 550 முதல் 600 குழந்தைகளின் பிறப்புக்கு உதவிகரமாக இருந்துள்ளார். இவர் மூலமாக கருவுற்று, பிரசவித்த ஒரு பெண்மணி இதுபற்றியத் தகவலை அறிந்து திடுக்கிட்டார்.

ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் இனியும் விந்தணு தானம் செய்யக் கூடாது என்று நெதர்லாந்து நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களால் 2017-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், வெளிநாடுகளில் வாழும் தம்பதியர்கள் மற்றும் உள்நாட்டில் உள்ளவர்களை ‘ஒன்லைன்’ மூலமாக தொடர்பு கொண்டு தனது ‘சேவையை’ அவர் தொடர்ந்து வந்ததாக அந்தப் பெண்மணிக்கு தெரிய வந்தது.

‘ஐநூறுக்கும் மேற்பட்ட முகம் தெரியாத குழந்தைகளுக்கு தந்தை என்றால்.. இவர் மூலமாக பரந்து, விரிந்த மரபணுக்களின் பரிணாம வளர்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில் வேரூன்றி விடுமே… ஒரே தந்தையின் வழித்தோன்றலாகப் பிறந்த உடன்பிறப்புகள் என்னும் உண்மையை அறியாமல் எதிர்காலத்தில் சில குழந்தைகள் தங்களுக்குள் காதல் வயப்பட்டு, திருமண பந்தத்தின் மூலம் இணைந்து விட்டால் சகோதரத்துவம் என்னும் சொல்லின் மாண்புகள் எல்லாம் பாழாகி விடுமே.. உடல்ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் அவர்கள் வருங்காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிவிட நேர்ந்து வீடுமே..’ என்னும் உள்ளுணர்வின் உந்துதலால் ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் இனிமேல் யாருக்கும் விந்தணு தானம் செய்யக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்’ என்று கோரி அந்தப் பெண்மணி ஹாக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்குள்ள மற்றொரு தொண்டு நிறுவனமும் இதே கோரிக்கையுடன் மேலும் ஒரு வழக்கினை மெய்ஜருக்கு எதிராகத் தொடர்ந்திருந்தது.

இவ்வழக்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி ஹெஸ்ஸலிங், ‘இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட இன்றைய நாளில் இருந்து ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் இனி யாருக்கும் விந்தணு தானம் செய்யக் கூடாது. தனது சேவைகள் தொடர்பாக விளம்பரப்படுத்தவும் கூடாது’ என்று தடை விதித்து உத்தரவிட்டார்.

நெதர்லாந்து நீதிமன்றத்தின் இந்தத் தடையை அவர் மீறும் பட்சத்தில் ஒரு இலட்சம் யூரோக்கள் (இலங்கை மதிப்புக்கு சுமார் 34,813,279.83 ரூபா) அபராதமாக செலுத்த நேரிடும்.

இசைக் கலைஞரான ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் தற்போது கென்யா நாட்டில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...