ஆஸ்திரேலிய ஃபெடரல் அரசாங்கம், முதலாளிகள் ஓய்வுக்கால பண வரவுகளை செய்யும் முறையை மாற்ற திட்டமிட்டுள்ளது.
அதன்படி, காலாண்டுக்கு ஒருமுறை பணம் வரவு வைப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு ஊதிய நாளிலும் அதைச் செய்ய வேண்டும் என்ற முன்மொழிவு ஏற்கப்பட உள்ளது.
இந்த புதிய சட்டம் ஜூலை 1, 2026 முதல் அமல்படுத்தப்படும் என்றும், விதிகளை சரிசெய்ய 03 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும் என்றும் மத்திய பொருளாளர் மற்றும் நிதிச் சேவைகள் அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய முதலாளிகள் ஒவ்வொரு காலாண்டிலும் பணியாளரின் சம்பளத்தில் 10.5 சதவீதத்தை ஓய்வு ஊதியமாக செலுத்த வேண்டும்.
2019-20 நிதியாண்டில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3.4 பில்லியன் டாலர் ஓய்வு ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வரித்துறை அலுவலகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.