AFL அல்லது ஆஸ்திரேலிய கால்பந்து லீக்கில் 19வது அணியாக டாஸ்மேனியன் மாநில அணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வீடியோ தொழில்நுட்பம் மூலம் இன்று பிற்பகல் நடைபெற்ற வாக்கெடுப்பில் மற்ற அனைத்து கிளப்களின் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதன்படி, இந்த வார இறுதிக்குள் ஆஸ்திரேலிய கால்பந்து லீக் கமிஷன் இறுதி முடிவு எடுக்க உள்ளது.
கடந்த சனிக்கிழமை, பிரதம மந்திரி Anthony Albanese ஹோபார்ட்டில், புதிய கால்பந்து மைதானம் கட்டுவது உட்பட, டாஸ்மேனியாவில் கால்பந்தாட்டத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு $240 மில்லியன் நிதியை மத்திய அரசு வழங்கும் என்று அறிவித்தார்.
2028-29 ஆம் ஆண்டில் கட்டி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய மைதானத்திற்கு மொத்தம் $715 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய நிலையில் கால்பந்தாட்ட மைதானத்தை கட்டுவதற்கு பெரும் தொகையை செலவழித்ததற்கு டாஸ்மேனியா மாகாண வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.