Sportsவிராட் கோலி - கம்பீருக்கு அபராதம் - IPL 2023

விராட் கோலி – கம்பீருக்கு அபராதம் – IPL 2023

-

ஐபிஎல் தொடரில் நேற்று 43-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதின.

லக்னோவை 18 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோலி – கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர்.

இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது. மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கும், பெங்களூரு வீரர் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், லக்னோ – பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...