2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் அதிக மழைப் பொழிவு பதிவான ஏப்ரல் மாதம் இந்த ஆண்டு பதிவாகியுள்ளது.
கடந்த மாதம் முழு நாட்டிலும் சராசரி மழைவீழ்ச்சியாக 41.4 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இது சாதாரண ஏப்ரல் மாதத்தில் பெய்யும் மழையுடன் ஒப்பிடுகையில் சுமார் 11 மி.மீ.
மேற்கு அவுஸ்திரேலியா- தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் வடக்கு பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2015ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் குளிரான ஏப்ரல் மாதமும் இந்த வருடத்தில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்று முதல் அடுத்த சில நாட்களில் விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாகாணங்களில் பலத்த காற்று வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.