இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகே மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால், நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.
சிட்னி நீதிமன்றில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியான தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்தனர்.
இதற்குக் காரணம், தமது வாடிக்கையாளருக்கான பிணைக் கோரிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 02 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டிய போது.
வெளிநாட்டுப் பிரஜையான தமது கட்சிக்காரர், அவுஸ்திரேலியாவில் வழக்கு ஒன்றில் ஈடுபட்டு சுமார் 6 மாதங்களாகிவிட்டதாகவும், இந்த தாமதங்களினால் பெரும் தொகையை செலவிட நேரிட்டதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி, அடுத்த நீதிமன்ற அமர்வில், உரிய நீதிமன்ற கட்டணத்தை நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகளே செலுத்த வேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்க தயாராகி வருகின்றனர்.
இந்த வழக்கு வரும் 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த வருடம் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க வந்த தனுஷ்க குணதிலக்க, சிட்னியில் யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.