எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு விதிக்க உள்ள புதிய கட்டுப்பாடுகளை அடுத்து, வழக்கமான சிகரெட் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
புகையிலை வரி அதிகரிப்பின் பின்னர் சிகரெட்டின் விலைகள் கணிசமான அளவு அதிகரிக்கப் போகின்ற போதிலும், பலர் மீண்டும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து சிகரெட்டுகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த 03 ஆண்டுகளுக்கு புகையிலை வரியை ஆண்டுக்கு 05 சதவீதம் உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் 3.3 பில்லியன் டாலர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகையான எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் இறக்குமதி தடை செய்யப்படும் மற்றும் பல்வேறு சுவைகள் அல்லது அதிக நிகோடின் செறிவு கொண்ட மின்-சிகரெட்டுகளை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்படும்.
வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் இதற்காக ஒதுக்கப்படும் தொகை 234 மில்லியன் டாலர்கள்.