கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் ஒரு வருடத்தில் காணாத மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டுள்ளனர்.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் அனைத்து வாழ்க்கைச் செலவுக் குறிகாட்டிகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவு காட்டுகிறது.
பணவீக்கம் உயர்வு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு – வீட்டுக் கடன் தவணை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், வரும் செவ்வாய்கிழமை திட்டமிடப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட் ஆவணத்தின் மூலம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு காண நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்தார்.
அதன் கீழ், குழந்தை பராமரிப்பு கட்டணம் மற்றும் மருந்து கட்டணங்களை குறைக்க முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.