Newsகருவிலுள்ள சிசுவுக்கு மூளையில் சத்திர சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை

கருவிலுள்ள சிசுவுக்கு மூளையில் சத்திர சிகிச்சை – மருத்துவர்கள் சாதனை

-

அமெரிக்க மருத்துவ குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். 

கர்ப்பமான பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய வைத்தியர்கள் பரிசோதனை செய்துள்ளனர். 

இந்த சோதனையில் மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும். இந்த குறைபாட்டினால் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். ரத்தம் நுண் குழாய்களுடன் நேரடியாக இணைவதற்கு பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணையும்.

இதன் காரணமாக நரம்புகளுக்குள் அதிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும். நரம்புகளில் இந்த கூடுதல் ரத்த அழுத்தம் ஏற்படும் போது பல பிரச்சினைகள் உருவாகும் என தெரிவித்தனர்.

மேலும் இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது.

மிகவும் அரிய வகை நோயான இந்த குறைபாட்டை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். 

அந்த குழந்தையை கருவிலேயே காப்பாற்ற மருத்துவரகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்தது. மிகவும் சவாலான இந்த மூளை அறுவை சிகிச்சையினை மருத்துவ குழுவினர் ஒரு ஊசி மூலம் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

உலகில் முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சையினை அமெரிக்க மருத்துவ குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...