Newsவிடுமுறைக்கு தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலியர் மர்ம மரணம்!

விடுமுறைக்கு தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலியர் மர்ம மரணம்!

-

தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்ட அவுஸ்திரேலியர் ஒருவர், அந்நாட்டு சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ விண்டர் (31) என்பவர், தனது முகத்தில் பச்சை குத்திக் கொள்வதற்காக ஐந்து நாள் பயணமாக தாய்லாந்தின் தீவான Phuketவிற்கு சென்றார்.

செவ்வாய்க்கிழமை அன்று நாடு திரும்ப இருந்த அவர், திங்கட்கிழமை அதிகாலையில் மது அருந்திவிட்டு தகராறு செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் படோங் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். நள்ளிரவு வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்பிற்கான காரணம் உடனடியாக அறியப்படவில்லை. எனினும் விண்டரின் மரணத்திற்கான காரணத்தைக் காட்டும் சிசிடிவி காட்சி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், அவை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

பிரேத பரிசோதனைக்காக விண்டரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தாய்லாந்து பொலிஸார் அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் Temporary Migration விசா வைத்திருப்பவர்கள் பற்றி ஐ.நா. சிறப்பு அறிக்கை

அவுஸ்திரேலியாவில் உள்ள தற்காலிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, சில முதலாளிகள் தற்காலிக புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுரண்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புலம்பெயர்ந்தோர்...

இந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர்களை மருந்துக்காக செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் இந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர்களை மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவிற்கு செலவிட்டுள்ளனர். அவுஸ்திரேலியர்களின் போதைப்பொருள் பாவனை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சட்டவிரோத போதைப்பொருள் பாவனை...

மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்

மலேசிய கோடீஸ்வரரான டி ஆனந்த கிருஷ்ணன் தனது 86வது வயதில் இன்று (28) காலமானார். “நவம்பர் 28 அன்று அமைதியாக காலமான எங்கள் தலைவர் டி ஆனந்த...

Black Friday தள்ளுபடிகளை வழங்க தயாராக உள்ள Jetstar 

Black Friday-ஐ முன்னிட்டு, Jetstar ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, உள்நாட்டுத் திரும்பும் விமானங்களுக்கு 42 டொலர்களிலிருந்தும், சர்வதேச நாடுகளுக்குத்...

Black Friday தள்ளுபடிகளை வழங்க தயாராக உள்ள Jetstar 

Black Friday-ஐ முன்னிட்டு, Jetstar ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, உள்நாட்டுத் திரும்பும் விமானங்களுக்கு 42 டொலர்களிலிருந்தும், சர்வதேச நாடுகளுக்குத்...

Black Friday-இற்காக மீண்டும் விலைகளை குறைக்கும் Coles மற்றும் Woolworths

Coles மற்றும் Woolworths பல்பொருள் அங்காடிகள் மீண்டும் Black Friday-இற்காக தங்கள் தயாரிப்புகளின் விலையை குறைத்துள்ளன. கிறிஸ்மஸ் சீசனில் தங்களுடைய கடைகளில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில்...