Sportsலக்னோவை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் - IPL 2023

லக்னோவை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள் குவித்தது.

ப்மன் கில் 94 ஓட்டத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார். சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 81 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து, 228 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

தொடக்க ஜோடி கைல் மேயர்ஸ், டி காக் அதிரடியாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது கைல் மேயர்ஸ் 48 ஓட்டத்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. டி காக் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 70 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

ஆயுஷ் பதோனி 21 ஓட்டத்தில் வெளியேறினார். இறுதியில், லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் மோகித் சர்மா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

நன்றி தமிழன்

Latest news

டட்டனின் $750 மில்லியன் திட்டத்திற்கு அல்பானீஸின் பதில்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தனது அரசியல் களத்தில் குற்றம் தொடர்பான தலைப்பைக் கொண்டு வந்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் மீதமுள்ள நிலையில், குற்றங்களை...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...