Sportsராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றை 2வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய அணித்தலைவர் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களை சேர்த்தது.

இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ஓட்டத்தில் அவுட்டானார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து, ராகுல் திரிபாதி 47 ஓட்டங்களும், அன்மோல்ப்ரீத் சிங் 33 ஓட்டம், ஹெயின்ரிச் கிளாசன் 26 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 25 ஓட்டங்களும், அப்துல் சமாத் 11 ஓட்டங்களும், எய்டன் மார்க்ரம் 6 ஓட்டங்களும், மார்கோ ஜான்சன் 3 ஓட்டங்களும் எடுத்தனர்.

அப்துல் சமான் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அவுட்டாகாமல் விளையாடினர்.

இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தலாக வெற்றிப்பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

டட்டனின் $750 மில்லியன் திட்டத்திற்கு அல்பானீஸின் பதில்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தனது அரசியல் களத்தில் குற்றம் தொடர்பான தலைப்பைக் கொண்டு வந்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் மீதமுள்ள நிலையில், குற்றங்களை...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...