Breaking Newsநாடு கடத்தப்பட்ட அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள்

நாடு கடத்தப்பட்ட அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள்

-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த 41 இலங்கையர்களும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (09) காலை அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ASY-013 விமானத்தில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்த இவர்கள் இன்று காலை 9.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் கடல் கடந்து அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...