SportsImpact வீரராக இலங்கை வீரர் - மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை...

Impact வீரராக இலங்கை வீரர் – மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – IPL 2023

-

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பதிரனா, Impact வீரராக களமிறங்கி விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.

நாணய சுழற்சியில் வென்ற CSK அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது.

கான்வே 10 ஓட்டங்களும், ரஹானே 21 ஓட்டங்களும், கெய்ட்வாட் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 7 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தூபே (25), ஜடேஜா (21), ராயுடு (23) அதிரடியாக ஓட்டங்கள் குவித்தனர்.

கேப்டன் தோனி 9 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தீபக் சஹர் பந்துவீச்சில் வார்னர் ஓட்டங்கள் எடுக்காமலும், சால்ட் 17 ஓட்டங்களிலும் வெளியேறினர். மார்ஷ் 5 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். அதன் பின்னர் ரோசோவ் , மனீஷ் பாண்டே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது சென்னை அணியில் Impact வீரராக களமிறங்கிய இலங்கையின் பதிரனா மிரட்டலான பந்துவீச்சில் மனீஷ் பாண்டேவை அவுட் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இறுதியில் டெல்லி அணி 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அடுத்த சுற்றினை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

Latest news

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு

சீனாவின் மலைப்பகுதியான திபெத் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் 130...

2025-இல் முக்கிய வங்கிகளின் பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் 2025 ஆம் ஆண்டிற்கான பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்த தங்கள் கணிப்புகளை வழங்கியுள்ளன. NAB குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ...

Dandenong-இல் கண்டெடுக்கப்பட்ட இனந்தெரியாத ஒருவரின் சடலம்

நேற்று காலை 9.40 மணியளவில் அவசர சேவைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி,Dandenong-ல் உள்ள வீடு ஒன்றில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Dandenongல் உள்ள McCrae St.-...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...

இளைஞர்கள் அதிகமுள்ள நகரம் எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் அதிக இளைஞர்கள் வசிக்கும் தலைநகரமாக டார்வின் காணப்படுகின்றது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர பணியகத்தின் தரவுகளின்படி, 35 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக டார்வின்...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...