13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிகோடின் அடங்கிய எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை விற்ற குற்றத்திற்காக பிரிஸ்பேன் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு $90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து சுகாதார திணைக்களத்திற்கு சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்தக் கடை அடையாளம் காணப்பட்டது.
குயின்ஸ்லாந்து சட்டம் அனுமதியின்றி நிகோடின் விற்பனையை தடை செய்கிறது.
மேலும் அந்த கடையில் சட்டவிரோத எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.