சம்பள உயர்வு தாமதம் தொடர்பாக வடமாநில அரசு மீது ஊழியர் சங்கங்கள் நியாயமான பணி ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.
கடந்த அக்டோபரில், 24,000 அரசு ஊழியர்கள் 02 சதவீதம் அதாவது சுமார் 2,000 டாலர் சம்பள உயர்வு பெறுவார்கள் என்று மாநில அரசு அறிவித்தது.
இதற்காக 250 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் 06 மாதங்களுக்கு மேலாகியும் தமக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என அரச ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதன்படி, இது தொடர்பான உத்தரவை வடமாநில அரசு பிறப்பிக்க வேண்டும் என்று நியாயமான பணி ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.