NewsWhatsApp தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட எலான் மஸ்க்!

WhatsApp தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட எலான் மஸ்க்!

-

உளவு பார்க்கும் வாட்ஸ்அப்பை கண்மூடித்தனமாக நம்பினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள், ஏனெனில் வாட்ஸ்அப்பை நம்புவது உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமரசம் செய்யும் நடவடிக்கை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் வாட்ஸ்அப் குறித்த அவரது கருத்து புயலை கிளப்பியுள்ளது.

வாட்ஸ்அப் தொடர்பாக மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை வாட்ஸ்அப் பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது சமூக ஊடகத்தில் அனைவரும் இந்த அறிக்கையைப் பற்றியே பேசுகிறார்கள். உலக அளவில் கோடிக்கணக்கானோர் அன்றாடம் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் நம்மை ஒட்டுக்கேட்கிறது என்று சொன்னால் யாருக்கு தான் அதிர்ச்சி ஏற்படாது.

ட்விட்டர் இன்ஜினியர் ஒருவர் வாட்ஸ்அப் ஒட்டு கேட்கிறது என்பது குறித்து ட்வீட் செய்துள்ளார். Foad Dabiri என்ற நபர் ஒரு ட்வீட்டில், “WhatsApp பின்னணியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.

இது நான் தூங்கிக்கொண்டிருக்கும் போதும், நான் காலை 6 மணிக்கு எழுந்ததிலிருந்து இது நடக்கிறது” என பதிவிட்ட நிலையில், இந்த நபரின் ட்வீட்டுக்கு பதிலளித்த மஸ்க், “WhatsApp ஐ நம்ப முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க்கும் இதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து இந்த புகார் குறித்து விசாரிப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...