ஆஸ்திரேலியா மற்றும் கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்களை விற்பனை செய்வதில்லை என டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதற்குக் காரணம், அந்த மாடல்களின் கார் ஸ்டீயரிங் இடது பக்கம் இருப்பதால் ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் இதற்கு அனுமதி இல்லை.
குறித்த கார்களின் வலது பக்கத்தில் ஸ்டீயரிங் தயாரிக்க டெஸ்லா நிறுவனம் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதன்படி, ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் சந்தைகளில் எஸ் மற்றும் எக்ஸ் வகை கார்கள் இனி வெளியிடப்படாது.
அந்த மாடல்களின் கார்களை வாங்க ஏற்கனவே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள், டெஸ்லா நிறுவனத்திடம் இருந்து முழுத் தொகையையும் திரும்பப் பெறவோ அல்லது வேறொரு மாடலின் காரை ஆர்டர் செய்யவோ வாய்ப்பு உள்ளது.