ஆஸ்திரேலியாவில் மோசடி மற்றும் ஆன்லைன் நிதி குற்றங்களை தடுக்க புதிய தேசிய மையம் நிறுவப்பட்டுள்ளது.
இது 86 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீட்டில் வரும் ஜூலை முதல் செயல்படத் தொடங்கும்.
நிதிக் குற்றப் புகார்களின் உடனடி விசாரணை மற்றும் இணையத் தாக்குதல்களின் தாக்கத்தைக் குறைப்பது குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.
உலகில் இணையத் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக அவுஸ்திரேலியர்கள் கருதப்படுவதுடன், கடந்த வருடம் இவ்வாறு அவர்கள் இழந்த தொகை 03 பில்லியன் டொலர்களாகும்.
இது 2021ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 80 சதவீதம் அதிகமாகும் என நுகர்வோர் ஆணையம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த 12 மாதங்களில் பல்வேறு மோசடிகள் காரணமாக 04 பிரதான வங்கிகளின் 31,000 வாடிக்கையாளர்கள் இழந்த தொகை 558 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.