Sports6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி - IPL 2023

6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் தூபே 34 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்தார். 

டேவன் கான்வே 30 ஓட்டங்களை, ஜடேஜா 20 ஓட்டங்களை எடுத்தனர். கொல்கத்தா சார்பில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 145 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. முன்னணி வீரர்களை தீபக் சாஹர் விரைவில் வெளியேற்றினார். இதனால் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா திணறியது. 

அடுத்து இறங்கிய அணித்தலைவர் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 

4வது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களும் சேர்த்த நிலையில் ரிங்கு சிங் 54 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில், கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்து வென்றது. 

நிதிஷ் ராணா 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சென்னை சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

குயின்ஸ்லாந்தில் வெள்ளம் – 16,000 கால்நடைகளை காணவில்லை

மழையின் விளைவுகள் வடக்கு குயின்ஸ்லாந்தில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நதிகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கால்நடைப் பண்ணைகளில் இருந்து 16,000க்கும் மேற்பட்ட விலங்குகள் காணாமல்...

சாதனை அளவு இழப்புகளை ஏற்படுத்து ஆஸ்திரேலியர்களின் Pokie போதைப் பழக்கம்

சூதாட்ட அடிமைத்தனத்தைக் கட்டுப்படுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் (NSW) சாதனை அளவிலான Pokie இழப்புகளை எதிர்கொள்வதாக...

அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட 38 வயது பிரபலம் மரணம்

ரஷ்யாவின் மாஸ்கோவில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், பிரபல கவர்ச்சி நடிகை Yulia Burtseva காலமானார். இன்ஸ்டாகிராமில் 74,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட...

பிரபலமான மெல்பேர்ண் மைதானத்தில் தோன்றிய புதைகுழி

மெல்பேர்ணின் வடகிழக்கில் உள்ள ஒரு பிரபலமான கால்பந்து மைதானத்தில் பாரிய நிலச்சரிவு காரணமாக ஒரு பெரிய புதைகுழி தோண்டப்பட்டுள்ளது. Heidelberg-இல் உள்ள AJ Burkitt Oval-இல் உள்ள...