SportsPlayoff சென்ற முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் - IPL 2023

Playoff சென்ற முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் – IPL 2023

-

அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 188 ஓட்டங்கள் குவித்தது.

சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 36 பந்துகளில் 47 ஓட்டங்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சென், பரூக்கி மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை அணியின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே முகமது ஷமி கைப்பற்றினார். அதன் பின்னர் மோஹித் சர்மா மறுமுனையில் தாக்குதல் தொடுத்தார்.

இதனால் ஐதராபாத் அணி நிலைகுலைந்தது. எனினும் தனியாளாக போராடிய ஹெய்ன்ரிச் கிளாசென் 44 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.புவனேஷ்வர்குமார் 27 ஓட்டங்களும், மார்க்கண்டே 9 பந்தில் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

Latest news

விக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபன்னாவில் 11 வயது குழந்தை நேற்று காலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது. நேற்று காலை 11.20 மணியளவில் இந்த விபத்து...

வரலாற்றில் முதல் முறையாக குறைந்துள்ள Tesla-வின் ஆண்டு விற்பனை

வரலாற்றில் முதன்முறையாக Tesla நிறுவனம் தனது வருடாந்த விற்பனை வீழ்ச்சியை 2ம் திகதி பதிவு செய்துள்ளது. அதிகரித்த போட்டி மற்றும் EVகளுக்கான மந்தமான தேவை காரணமாக விற்பனை...

ஜனவரியில் விக்டோரியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்

ஜனவரியில் விக்டோரியாவில் தவறவிடக்கூடாத இடங்கள் குறித்த அறிக்கையை timeout சமர்ப்பித்துள்ளார். இவற்றில் விக்டோரியாவில் வாழும் பலர் கூட இதுவரை சென்றிராத இடங்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியாவில் கடற்கரையிலிருந்து தேசிய...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சிறியரக விமானம் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அதன்படி, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் சிறிய...