Sportsலக்னோ அணி திரில் வெற்றி- IPL 2023

லக்னோ அணி திரில் வெற்றி- IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 177 ஓட்டங்களை சேர்த்தது.

அணித்தலைவர் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ஓட்டங்களை சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 178 ஓட்டங்களை சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 37 ஓட்டத்தில் அவுட்டானார்.

இஷான் கிஷன் அரை சதமடித்து 59 ஓட்டங்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டத்திலும், வதேரா 16 ஓட்டத்திலும் அவுட்டாகினர்.

கடைசி கட்டத்தில் டிம் டேவிட் அதிரடியில் மிரட்டினார். அவர் 32 ஓட்டத்திலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், மும்பை அணி 172 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் லக்னோ அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Latest news

தனது 28 கிளைகள் மூடப்பட உள்ள ஆஸ்திரேலியாவின் பிரபலமான வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான Bendigo வங்கி, அதன் 28 கிளைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கிளை மாதிரி இனி பொருத்தமானதாக இல்லாததால்,...

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

71 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த WWE ஜாம்பவான்

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த வீரராகக் கருதப்பட்ட 71 வயதான Hulk Hogan வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது வர்த்தக முத்திரையான bandana, sunglasses...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...