Newsடிஸ்னி பூங்காவில் இரு குடும்பத்தினர் இடையே மோதல்

டிஸ்னி பூங்காவில் இரு குடும்பத்தினர் இடையே மோதல்

-

உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரிஸ், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளன.

இந்நிலையில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் பூங்காவில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.

அந்த பூங்காவில் நிறுவப்பட்ட சின்னமான 100 ஆண்டு நினைவு பலகையின் முன்பு புகைப்படம் எடுப்பதற்காக ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் மற்றொரு குடும்பத்தினர் அவர்களை நகருமாறு கூறியதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு குடும்பத்தையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கியுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு இந்த சண்டை நீடித்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் பூங்கா ஊழியர்கள் இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...

குயின்ஸ்லாந்தில் கோர விபத்து – இரு குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையின் ஒரு...

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

குயின்ஸ்லாந்தில் கோர விபத்து – இரு குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையின் ஒரு...

39-க்கும் அதிகமான நாடுகளில் ‘ஜன நாயகன்’ வெளியிட தடை

நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் எதிர்வரும் 9ஆம் திகதி வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச்....