Newsடைட்டானிக் கப்பல் குறித்த மர்மங்களுக்கு தீர்வு கிடைத்தது!

டைட்டானிக் கப்பல் குறித்த மர்மங்களுக்கு தீர்வு கிடைத்தது!

-

அட்லாண்டிக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் 3னு ஸ்கேன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் டைட்டானிக்கின் முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேனை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஸ்கேன் மூலமாக டைட்டானிக் கப்பலின், சிதைவுகளை விரிவாகவும், தெளிவாகவும் பார்க்க முடிகிறது.

இரண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஆறு வாரங்களாக வடக்கு அட்லாண்டிக் கடலில் இந்த ஆய்வை மேற்கொண்டு, இதனை வெளியிட்டுள்ளனர்.

ஏப்ரல் 15 ஆம் திகதி 1912 அன்று, டைட்டானிக் கப்பலானது இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.

இதன்போது வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சொகுசு கடல் கப்பல் சில மணிநேரங்களில் மூழ்கி சுமார் 1,500 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்தது.

டைட்டானிக்கின் முந்தைய படங்கள் பெரும்பாலும் குறைந்த ஒளி அளவுகளால் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், பார்வையாளர்கள் ஒரு நேரத்தில் சிதைவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க அனுமதித்ததாகவும் காணப்பட்ட நிலையில், தற்போதைய 3D ஸ்கேனிங் மூலம் தெளிவாகவும், துள்ளியமாகவும் பார்க்க முடிகிறது.

Latest news

அதிக சம்பளம் வாங்கும் பிரதமரையும், மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்களையும் கொண்ட மாநிலம்

விக்டோரியன் ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் சம்பள உயர்வைக் கோருகின்றனர். நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் விக்டோரியாவில் இருந்தாலும், நாட்டிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தாங்கள்தான்...

செம்பு கம்பி திருட்டு மோசடி – $100 மில்லியன் இழப்பு

ஆஸ்திரேலியாவின் மின் அமைப்புகளை கடுமையாகப் பாதிக்கும் செம்பு திருட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. தெருவிளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் செம்பு கம்பிகள் ஏராளமான திருட்டுப் போனதாகப் புகார்கள் வந்துள்ளன. இதை...

இளைஞர் உதவித்தொகை பெறும் ஆஸ்திரேலிய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு

ஆஸ்திரேலியாவில் இளைஞர் உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமூக சேவைகள் துறையின் புள்ளிவிவரங்கள், கடந்த 20 ஆண்டுகளில் இளைஞர் உதவித்தொகை பெறும் மாணவர்களின்...

இன்று முதல் NSW ஓட்டுநர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர்களுக்கு இடத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று தொடங்கும். அதன்படி, டிக்கெட் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான அபராதம் இன்று முதல் தடை...

இன்று முதல் NSW ஓட்டுநர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர்களுக்கு இடத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று தொடங்கும். அதன்படி, டிக்கெட் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான அபராதம் இன்று முதல் தடை...