அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வர தடைசெய்யப்பட்ட 38 டன் உணவு மற்றும் விலங்குகளின் பாகங்கள் சிட்னியில் உள்ள கிடங்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் எந்த நாட்டிலிருந்து வந்தன என்பது இதுவரை தெரியவரவில்லை.
இதில் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏதேனும் வகையில் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு அபராதமும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
அதிக உயிர் பாதுகாப்பு சட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது.