Sportsபஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி - IPL 2023

பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற 66வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ல் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ஓட்டத்திலும், அதர்வா தாயீட் 19 ஓட்டத்திலும், ஷிகர் தவான் 17 ஓட்டத்திலும், லிவிங்ஸ்டோன் 9 ஓட்டத்திலும் அவுட்டாகினர்.

இதனால் பஞ்சாப் அணி 50 ஓட்டத்திலும் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா ஜோடி 64 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், ஜிதேஷ் சர்மா 44 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 49 ஓட்டமும், ஷாருக் கான் 41 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து, 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக தேவ்தட் படிக்கல் 51 ஒட்டங்களும், யாஷவி ஜெய்ஸ்வால் 50 ஒட்டங்களும், ஷிம்ரன் ஹெட்மியர் 46 ஓட்டங்களும்,

ரியான் பராக் 20 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 2 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜோஸ் பட்லர் ஓட்டம் எடுக்காமல் அவுட்டானார். துருவ் ஜூரல் 10 ஓட்டங்களும், டிரெண்ட் பவுல்ட் ஒரு ஓட்டமும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 189 ஓட்டங்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றிப்பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

அதிகாரிகள் பற்றாக்குறையால் ஆபத்தில் உள்ள 000

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகளின் பற்றாக்குறையால், அவசர அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் 000 பெரும்பாலும் தவறிவிட்டதாக ஊடகங்களில் கசிந்த பல மின்னஞ்சல்கள் வெளிப்படுத்தியுள்ளன. பொலிஸ் அழைப்பு மையம் பெறப்படும்...

iPhone 16-ஐ தடை செய்த பிரபல நாடு

இந்தோனேசியா ஆப்பிளின் உள்ளூர் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதை அடுத்து, இந்தோனேசியாவில் iPhone 16 மாடல்களின் விற்பனையை ஆப்பிள் தடை செய்துள்ளது. இந்தோனேசியாவின் உள்நாட்டில் 40...

வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது....

ஆஸ்திரேலியாவில் ஒற்றை இலக்கத்தில் குறைந்த பணவீக்கம்

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, காலாண்டு நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 3.8 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2021க்குப் பிறகு பணவீக்கம் இப்படி...

கொடிய நச்சுக் காளான் வகையைப் பற்றி மெல்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

கொடிய காளான் வகையை சாப்பிட்ட மெல்பேர்ண் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மரணம் குறித்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், இறந்த பெண் தனது சொந்த தோட்டத்தில் வளர்க்கப்பட்ட காளான்...

ஆஸ்திரேலியாவில் ஒற்றை இலக்கத்தில் குறைந்த பணவீக்கம்

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, காலாண்டு நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 3.8 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2021க்குப் பிறகு பணவீக்கம் இப்படி...