Newsஇத்தனை கோடி செலவில் இனி விண்வெளியில் திருமணம் செய்யலாம்

இத்தனை கோடி செலவில் இனி விண்வெளியில் திருமணம் செய்யலாம்

-

பூமிக்கு மேலே விண்வெளியில் திருமணம் செய்யும் சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதற்கு ரூ.1 கோடி கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவை தலைமைடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் ஒரு படி மேலே சென்று விண்வெளியில் திருமணம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்யேக கேப்ஸ்யூல்களில் தம்பதிகள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு தொடங்கவுள்ள இத்திட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இப்போதே முண்டியடித்துக் கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

கிரேன் சரிந்து விழுந்ததில் 90 பேர் இடம்பெயர்வு

பலத்த காற்று காரணமாக கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சவுத்போர்ட்டில் உள்ள ஒரு கேரவன் பூங்காவில் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்ததில் 90க்கும் மேற்பட்டோர்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துள்ள வெள்ள அபாயம்

குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு பிராந்தியத்தின் ஈரமான...

20 ஆண்டுகளுக்கு முன்பு 3 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஆஸ்திரேலியப் பெண்

இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய மற்றும் சிக்கலான மூன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவின் முதல் பெண் லூசிண்டா...

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

20 ஆண்டுகளுக்கு முன்பு 3 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஆஸ்திரேலியப் பெண்

இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய மற்றும் சிக்கலான மூன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவின் முதல் பெண் லூசிண்டா...