Sportsடெல்லியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி - IPL 2023

டெல்லியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி – IPL 2023

-

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக டெவோன் கொன்வே 87 ஓட்டங்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தநிலையில், 224 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

வெற்றி பெற்ற சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

நன்றி தமிழன்

Latest news

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...

மெல்பேர்ணில் ஆயிரக்கணக்கானோருக்கு சிரமத்தை ஏற்படுத்திய Triple-Zero

மெல்பேர்ணின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் 14,300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் Optus Triple-Zero செயலிழப்பால் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இன்று காலை Frankston மற்றும் Mornington தீபகற்பப் பகுதிகளில்...

மெல்பேர்ணில் தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த இளம் தந்தை

மெல்பேர்ணின் தென்மேற்கே உள்ள Altona வடக்கில் ஒரு வீட்டிற்கு வெளியே நடந்த தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் இறந்த நபர் இபி ஹமீத்...