விக்டோரியா மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான டிக்கெட் ஒப்பந்தத்தை ஒப்படைத்துள்ள புதிய நிறுவனத்திடம் அதற்கான போதிய வசதிகள் இல்லை என சர்ச்சைக்குரிய கண்டுபிடிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள MyKi கார்டு வரும் டிசம்பர் மாதம் முதல் பல மாற்றங்களை சந்திக்க உள்ளது.
1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்களிடம் இன்னமும் இயந்திரங்களோ அல்லது அது தொடர்பான தொழில்நுட்ப சாதனங்களோ இல்லை என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், விக்டோரியா மாநில அரசு, உரிய ஒப்பந்தம் முறையான டெண்டர் செயல்முறை மூலம் வழங்கப்பட்டது என்று வலியுறுத்துகிறது.