குளிர்காலம் தொடங்கும் நாட்களை நெருங்கி வரும் நிலையில், ஆஸ்திரேலிய சுகாதார துறையினர் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொடர்பான தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை என்றால், உடனடியாக அதை வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, 1/10 குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருடத்தில் இதுவரை 40,000க்கும் அதிகமான காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் 1 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இன்ஃப்ளூயன்ஸாவின் நிலை தீவிரமானால் நிமோனியா கூட ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
1/5 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.