Sportsஒரு ஓட்ட வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி - IPL...

ஒரு ஓட்ட வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடரில் 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதின. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி கொல்கத்தா அணியினரின் அபார பந்துவீச்சில் லக்னோ சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. 

இதனால் 73 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய ஆயுஷ் பதோனியுடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பதோனி 25 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். 

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 58 ஓட்டத்தில் வெளியேறினார். இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா சார்பில் ஷர்துல் தாக்குர், வைபவ் அரோரா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. 

இதில், அதிகபட்சமாக அரை சதம் அடித்த ரிங்கு சிங் 67 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார். தொடர்ந்து, ஜாசன் ராய் 45 ஓட்டங்கள், வெங்கடேஷ் ஐயர் 24 ஓட்டங்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 8 ஓட்டங்களும், ஆண்டிரே ரூசல் 7 ஓட்டங்களும், ஷார்துல் தகூர் 3 ஓட்டங்களும், சுனில் நரைன் ஒரு ஓட்டமும் எடுத்தனர். 

இறுதியாக களமிறங்கிய வைபவ் அரோரா ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார். ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிப் பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...