அவுஸ்திரேலியா ஆயிரக்கணக்கான வனவிலங்குகளுக்கு இருப்பிடமாகத் திகழ்கின்றது.
ஆனாலும் அங்குள்ள பெரும்பாலான விலங்குநல மருத்துவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளை பராமரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிட்னியை சேர்ந்த இரு விலங்குப்பிரியர்கள் வனவிலங்குகளுக்கு பராமரிப்பு வழங்க நடமாடும் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது.
Possum joey எனப்படும் வகையை சேர்ந்த விலங்குகளுக்கு கூடுதல் அரவணைப்பு தேவைப்படுகிறது.
சிட்னி வனவிலங்கு சேவைகளின் நடமாடும் பராமரிப்பு நிலையத்திற்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விலங்கினங்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் அந்த தொண்டு நிறுவனம் 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
விலங்குகளை மற்ற நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதைக் காட்டிலும் அங்கு கொண்டுவருவது நல்லது என்று தொண்டூழிய மருத்துவர்கள் கருதுகின்றனர்.2000 ஆம் ஆண்டு முதல் நடமாடும் சேவைகள் இயங்கிவருகின்றன.
நன்றி தமிழன்