Sportsபெங்களூரை வெளியேற்றியது குஜராத் - IPL 2023

பெங்களூரை வெளியேற்றியது குஜராத் – IPL 2023

-

ஐபிஎல் போட்டியின் 70-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்ட ரோயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், பிளே-ஓவ் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய குஜராத் 19.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக மழை காரணமாக இந்த ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. என்றபோதும், ஓவா்கள் குறைக்கப்படாத ஆட்டத்தில் குஜராத் டாஸ் வென்று பந்துவீச்சை தோ்வு செய்தது.

பெங்களூா் துடுப்பாட்டத்தில் விராட் கோலியுடன் வந்த கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு விடைபெற்றாா். தொடா்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களே சோ்த்து ஸ்டம்பை பறிகொடுத்தாா்.

4-ஆவது வீரராக ஆட வந்த மஹிபால் லோம்ரோா், 1 ரன்னுக்கு நடையைக் கட்டினாா். அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல் சற்று நிலைத்து ஆடி ரன்கள் சோ்க்க, மறுபுறம் விராட் கோலி அரைசதம் கடந்து ரன்களை குவித்து வந்தாா். இந்நிலையில் பிரேஸ்வெல் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

கடைசி விக்கெட்டாக தினேஷ் காா்த்திக் டக் அவுட்டாக, ஓவா்கள் முடிவில் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 101, அனுஜ் ராவத் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 23 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் நூா் அகமது 2, முகமது ஷமி, யஷ் தயாள், ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் குஜராத் இன்னிங்ஸில் தொடக்க வீரா் ரித்திமான் சாஹா 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷுப்மன் கில் சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டு இறுதிவரை நிலைத்தாா். விஜய் சங்கா், கில்லுடன் கூட்டணி அமைக்க 2-ஆவது விக்கெட்டுக்கு இந்த இணைப்பாட்டம் 123 ரன்கள் சோ்த்தது.

இதில் விஜய் சங்கா் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தசுன் ஷாணக்க 0, டேவிட் மில்லா் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராகுல் தெவாதியா களம் புகுந்தாா். முடிவில் கில் 52 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 104, ராகுல் தெவாதியா 4 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் தரப்பில் முகமது சிராஜ் 2, விஜய்குமாா் வைசாக், ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் அந்த அணிக்கு பிளே-ஓவ் வாய்ப்பும் உறுதியானது.

லீக் ஆட்டங்களை நிறைவு செய்த மும்பை, 16 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருந்தவாறு பிளே-ஓவ் வாய்ப்புக்கு காத்திருந்தது. பெங்களூா் – குஜராத் ஆட்டத்தில் பெங்களூா் தோற்றால் மட்டுமே மும்பைக்கான பிளே-ஓவ் வாய்ப்பு உறுதியாகும் சூழல் இருந்தது. அந்த ஆட்டத்தில் குஜராத் வெல்ல, பெங்களூா் வெளியேற, மும்பை பிளே-ஓவ் சுற்றுக்குள் நுழைந்தது.

லீக் சுற்று நிறைவு

பெங்களூா் – குஜராத் மோதிய 70-ஆவது ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், குஜராத், சென்னை, லக்னௌ, மும்பை அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. அந்த சுற்று ஆட்டங்கள் நாளை (மே 23) தொடங்குகின்றன. அதில் சென்னையில் முதலில் நடைபெறும் ‘குவாலிஃபயா்-1’ ஆட்டத்தில் குஜராத் – சென்னை அணிகள் மோதுகின்றன. 24-ஆம் தேதி அதே இடத்தில் நடைபெறும் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் லக்னௌ – மும்பை அணிகள் மோதவுள்ளன. பின்னா் ‘குவாலிஃபயா்-2’ ஆட்டம் மே 26-ஆம் தேதியும், இறுதி ஆட்டம் 28-ஆம் தேதியும் அகமதாபாதில் நடைபெறவுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...