Breaking Newsசிட்னியில் பயங்கர தீ விபத்து

சிட்னியில் பயங்கர தீ விபத்து

-

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று (25) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. 

அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பரவ ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. 

கட்டிடத்தின் மேல் தள சுவர் முழுவதும் சாய்ந்து கீழே தெருவில் சிதறியுள்ளது. தரையில் நின்றிருந்த ஒரு வாகனம் தீயில் கருகியது. 

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த போராடிவருகின்றனர். 

தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறு தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

மாணவர்களுக்கான பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ள பள்ளி

குயின்ஸ்லாந்தில் உள்ள ஆண்கள் கல்லூரியான St Edmund’s கல்லூரி விதித்த புதிய சிகை அலங்கார விதிகள், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளி பருவம்...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

மெல்பேர்ணில் அழிக்கப்பட்ட இரண்டு வரலாற்று நினைவுச்சின்னங்கள்

மெல்பேர்ணில் இரண்டு காலனித்துவ கால நினைவுச்சின்னங்களை ஒரு குழு நாசகாரர்கள் அழித்துள்ளனர். நேற்று இரவுக்கும் இன்று காலைக்கும் இடையில், நாசகாரர்களின் இலக்காக மாறியுள்ள இந்த வரலாற்று நினைவுச்சின்னங்களைப்...

Ampol-இன் முடிவால் எரிபொருள் விலை உயருமா?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான Ampol, EG ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 500 சேவை நிலையங்களை கையகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான...