Newsவீட்டு வசதி நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

வீட்டு வசதி நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

-

மத்திய அரசின் வீட்டு வசதி நிதிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை உயர்த்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 500 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும் இந்த 10 பில்லியன் டாலர் நிதியின் மூலம் புதிய சமூக பாதுகாப்பு வீடுகள் கட்டப்பட்டு பழங்குடியின மக்களின் வீடுகள் மேம்படுத்தப்படும்.

முதல் 5 ஆண்டுகளில் 20,000 வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 4,000 வீடுகளும், முன்னணி ஊழியர்களுக்கு 10,000 வீடுகளும் ஒதுக்கப்படும்.

எவ்வாறாயினும், இந்த ஏற்பாடுகள் போதாது எனவும் அரசாங்கத்தின் இலக்கு வெற்றியடையாது எனவும் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு பலமுறை தெரிவித்தும், திருப்திகரமான பதில் கிடைக்காததால், அந்த முன்மொழிவை ஆதரிக்க முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest news

தனது உயிரைத் தியாகம் செய்து உலகை விட்டுச் சென்ற தீயணைப்பு வீரர்

நியூ சவுத் வேல்ஸின் Bulahdelah-இல் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 59 வயதான தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை (NPWS) தீயணைப்பு வீரர் ஒருவர்...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை கடுமையாக எதிர்க்கும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் Facebook, Instagram, TikTok, மற்றும் Snapchat போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இந்த புதன்கிழமை அமலுக்கு...

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

மெல்பேர்ணில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள 4 ஷாப்பிங் மையங்கள்

மெல்பேர்ண் நான்கு பரபரப்பான ஷாப்பிங் மையங்களில் 90 நாட்களுக்கு போலீஸ் ரோந்துப் பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. துப்பாக்கி குற்றங்களை குறிவைத்து நடத்தப்படும் Operation Pulse எனப்படும்...