AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் தனிப்பட்ட மற்றும் இரகசியத் தகவல்கள் வெளி தரப்பினரால் பெறப்படும் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெர்த்தில் உள்ள 05 மருத்துவமனைகளின் ஊழியர்கள் சாட்ஜிபிடி போன்ற மென்பொருளைப் பயன்படுத்தி நோயாளிகளின் பதிவேடுகளைத் தயாரிக்க மருத்துவ அறிவுரைகளை எழுதுவது தெரியவந்துள்ளது.
சைபர் மோசடி செய்பவர்களின் கைகளுக்கு இதுபோன்ற செய்திகள் சிக்கினால் நோயாளிகளின் தனியுரிமை கடுமையாக பாதிக்கப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் மிகச் சில வைத்தியர்களே தற்போது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.