அவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் இரவு உணவு உண்ணும்போது திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த அப்பெண், குடும்ப விருந்தின்போது துரதிர்ஷ்டவசமாக தனது பெற்றோர் முன்னிலையில் உயிரிழந்துள்ளார்.
26 வயதான டேனியலா டுச்சாடெல் (Dani Duchatel), மே 21 அன்று இரவு 10 மணிக்குப் பிறகு பிரிஸ்பேனின் மோர்டன் பேயில் உள்ள தனது பெற்றோருடன் இரவு உணவு சாப்பிட்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.
அரசு ஊழியரான இவருக்கு சமீபத்தில் கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து பெற்றோருடன் தங்கி இருந்தார்.
அறுவை சிகிச்சையின் காரணமாக, இரத்த உறைவு ஏற்பட்டு நுரையீரல் தக்கையடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் மருத்துவர்கள் இன்னும் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.