Newsஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் Toyota

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் Toyota

-

டொயோட்டா தொடர்ந்து 7வது ஆண்டாக ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான வாகன பிராண்டாக மாறியுள்ளது.

கடந்த வருடம் இலங்கையில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் டொயோட்டா வாகனங்களின் விற்பனை ஏனைய வகை வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 03 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10,81,429 ஆகும்.

டொயோட்டா ஹை-லக்ஸ் வாகனங்களை ஆஸ்திரேலியர்கள் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில், 21.4 சதவீதம் டொயோட்டா வாகனங்கள், இதில் சுமார் 64,000 டொயோட்டா ஹை-லக்ஸ் வாகனங்கள்.

மஸ்டா 8.4 சதவீதம் அல்லது 95,718 வாகனங்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

78,330 வாகனங்களை விற்பனை செய்து கியா 03வது இடத்தையும், மிட்சுபிஷி 76,991 வாகனங்களை விற்பனை செய்து 04வது இடத்தையும் அடைந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் 73,345 வாகனங்களை விற்பனை செய்து 5வது இடத்தில் உள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...