Sports5-வது முறையாக மகுடம் சூடிய Chennai Super Kings - IPL...

5-வது முறையாக மகுடம் சூடிய Chennai Super Kings – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக மகுடம் சூடியது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் திகதி ஆரம்பமானது.

10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் கொண்டாட்டத்தில் லீக் மற்றும் ‘பிளே-ஓவ் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், சென்னை சுப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. மகுடத்துக்கான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற இருந்தது.

ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் இறுதிப்போட்டி மறுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில் குஜராத்- சென்னை அணிகள் இடையிலான இறுதி போhட்டி நேற்றிரவு ஆமதாபாத்தில் இடம்பெற்றது.

இரு அணியிலும் மாற்றமில்லை. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் தோனி, மழைக்குரிய அறிகுறி தென்படுவதால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.

எச்சரிக்கையுடன் தொடங்கிய இருவருக்கும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. கில் 3 ஓட்டத்தில் இருந்த போது வழங்கிய மிக எளிதான கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட கில், தேஷ்பாண்டே மற்றும் தீக்ஷனா ஓவர்களில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

மறுமுனையில் வேகம் காட்டிய சஹா 21 ஓட்டத்தில் இருந்தபோது பந்து வீசிய தீபக் சாஹருக்கு கேட்ச் செய்ய வாய்ப்பு கிட்டியது. இந்த முறையும் பிடிக்க தவறினார்.

அத்துடன் சஹா 27 ஓட்டத்தில் இரு முறை ரன்-அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார். கண்டம் தப்பிய இருவரும் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ஓட்டம் திரட்டி வலுவான அடித்தளம் அமைத்தனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பவர்-பிளேயில் எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோர் இதுவாகும்.

ஸ்கோர் 67 ஆக உயர்ந்த போது சுப்மன் கில் 39 ஓட்டங்களில் (20 பந்து, 7 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் விக்கெட் கீப்பர் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...