Newsகிரவுன் கேசினோ மேலும் $450 மில்லியனை இழப்பீடாக செலுத்த முடிவு

கிரவுன் கேசினோ மேலும் $450 மில்லியனை இழப்பீடாக செலுத்த முடிவு

-

பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான நஷ்டஈடாக 450 மில்லியன் டொலர்களை செலுத்த கிரவுன் கேசினோ முடிவு செய்துள்ளது.

மெல்பேர்ன் மற்றும் பெர்த்தில் அமைந்துள்ள கசினோ மையங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் பிரகாரம் இந்தத் தொகையை செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

பணமோசடியைத் தடுப்பதற்கும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் புழங்குவதைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கிரவுன் கேசினோ ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கூடும் பெடரல் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

கடந்த வருடத்தில், பல்வேறு நிதி முறைகேடுகள் காரணமாக கிரவுன் கேசினோவிற்கு 03 சந்தர்ப்பங்களில் 230 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...