Newsஏலத்தில் விடப்படும் ஹிட்லரின் பென்சில்

ஏலத்தில் விடப்படும் ஹிட்லரின் பென்சில்

-

அடோல்ப் ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது.

குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் ஏலம் விடப்படவுள்ளது.

1941 ஆம் ஆண்டு இந்தப் பென்சிலை ஹிட்லருக்கு 52 ஆவது பிறந்த நாள் பரிசாக அவரின் நீண்ட நாள் காதலி எவா பிரான் (Eva Braun) கொடுத்தார் எனக் கூறப்படுகிறது.

அதில் ‘எவா’ என்று ஜெர்மானிய மொழியிலும் “AH” என்ற எழுத்துகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பென்சிலை 2002 ஆம் ஆண்டு ஒருவர் ஏலத்தில் வாங்கினார், இது மீண்டும் ஜூன் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள Bloomfield ஏலத்தில் மீண்டும் விற்கப்படவுள்ளது.

இதேவேளை, அதனுடன் கையெழுத்திடப்பட்ட ஹிட்லரின் படம், விக்டோரியா அரசியார் வழங்கிய கையால் எழுதப்பட்ட மன்னிப்பு ஆவணம் ஆகியவையும் ஏலம் விடப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...