முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு முத்திரை வரிச் சலுகையை உயர்த்துவதற்கான முன்மொழிவு நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக $650,000 மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு முத்திரை வரி விலக்கு $800,000 மதிப்பாக அதிகரிக்கும்.
அத்துடன், அதிகபட்சமாக 800,000 டொலர் பெறுமதியான வீடுகளுக்கான முத்திரை வரி விலக்கு 1 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த 02 நிகழ்வுகளுக்கும் சுமார் 13,000 முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் இந்தச் சலுகையைப் பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு குறைந்தபட்சம் $31,090 நிவாரணம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.