110 தனியார் பள்ளிகளை ஊதிய வரியில் சேர்க்கும் திட்டம் விக்டோரியா மாநில அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஒரு மாணவருக்கு $7,500க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்குப் புதிய விதியைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டது.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகையை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டது.
03 ஆண்டுகளில் 422 மில்லியன் டாலர்களை வசூலிக்க வேண்டும் என்பது அதன் எதிர்பார்ப்பு.
எனினும் இந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த பிரேரணையை வாபஸ் பெறும் முயற்சியில் அந்த மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் ஈடுபட்டுள்ளார்.